சிறந்த படைப்பாளி என்ற அந்தஸ்தை முதல் படத்திலேயே பெற்றவர் இயக்குனர் பா ரஞ்சித். அந்த அளவிற்கு முதல் படம் சிறப்பாக அமைந்து இருந்தது அதை தொடர்ந்து டாப் ஜாம்பவான்கள் பலரும் பா ரஞ்சித் நம்பி பட வாய்ப்பை கொடுத்த ஆரம்பித்தனர்.
அந்த வகையில் கார்த்தியின் மெட்ராஸ் , ரஜினி காலா என அடுத்தடுத்த படங்களை கொடுத்தார். இவர் கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து “சார்பட்டா பரம்பரை” என்னும் திரைப்படத்தை கொடுத்திருந்தார். படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.
இது ஒரு உண்மைக்கதையை தழுவியது. இந்த திரைப்படத்தைப் பா ரஞ்சித் ரசிக்கும் படி எடுத்திருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்தது மேலும் படத்தை பார்த்த இயக்குனர்கள் தொடங்கி சினிமா ஆர்வலர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டிய தோடு படத்தில் நடித்தவர்களையும் புகழ்ந்து தள்ளி வந்தனர்.
ஏற்கனவே நடிகர் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் தொடங்கிய செல்வராகவன் வரை பலரும் புகழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த இயக்குனர் அட்லீ. தனது பாராட்டை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தார் அவர் கூறியது.
அற்புதமான படம் எனக்கு பிடித்திருக்கிறது ஆர்யா படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். சந்தோஷ் அண்ணாவின் இசை இன்னும் என் காதில் ஒலிக்கிறது ஒளிப்பதிவாளர் கலை இயக்குனர் என எல்லா துறையிலும் தங்களுடைய பங்களிப்பை அற்புதமாக கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு கட்டத்திலும் அனைவரின் உழைப்பும் நன்றாகவே இருக்கிறது என தெரிவித்தார் மேலும் இந்த படத்தில் நடித்த ரங்கன் வாத்தியார், வேம்புலி, டான்சிங் ரோஸ் சபீர், கலையரசன், காளி வெங்கட், ஆர்யா போன்ற ஒரு நடிப்பு உச்சத்தில் இருந்தது.
அதிலும் என்னை மிகவும் கவர்ந்தது எண்ணுமோ டான்சிங் ரோஸ் சபீர் கதாபாத்திரம் தான் என புகழ்ந்து கூறினார். ல்ல போனால் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் கொடுப்பார் என ஒரு தரப்பினர் ரசிகர்கள் கூறுகின்றனர்.