Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமிப காலமாக நடித்த படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. இதனால் தனது 169 படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இயக்குனர்களுடன் கதை கேட்டார் ஆனால் அவருக்கு நெல்சன் சொன்ன கதை பிடித்திருந்தால் ஜெயிலர் படம் அதிரடியாக உருவானது.
படத்தில் ரஜினியுடன் சேர்த்து சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இதுவரை ஜெயிலர் படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதன் பிறகு காவாலா, ஹுக்கும், கடைசியாக வந்த மூன்றாவது பாடலும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வைரலானது.
அதன் பிறகு இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்தது அதில் ரஜினி நெல்சன் பற்றியும் தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டம் ஆகியவற்றை பற்றி பேசி அதிர வைத்தார். அதனை தொடர்ந்து ப்ரமோஷன் வேலைகளிலும் படக்குழு தீவிரம் காட்டுகிறது ஏனென்றால் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு என்னென்ன கதாபாத்திரம் என்பது குறித்து ஒரு தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் கசிந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது தமன்னாவுக்கு எந்த படத்தில் முக்கிய வேடம் எதுவும் இல்லை.. மற்றபடி மோகன்லால், சிவராஜ் குமார் போன்றவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவல்லை..