நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது. அதன்பின் வெற்றிமாறனுடன் முதன்முறையாக கைகொடுத்தது வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் நடிகர் சூர்யா இப்படி சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் வெற்றிமேல் வெற்றியைக் கண்டு வருகிறார்.
இப்படி இருந்தாலும் ஒரு சில முக்கியமான படங்களையும் அவர் தவற விட்டு உள்ளார். அந்த வகையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு OTT தளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது சொல்லப்போனால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்து இழுத்தது.
இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜான் கொக்கின், சந்தோஷ், கலையரசன், பசுபதி, ஜி எம் சுந்தர் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததால் இந்த திரைப்படத்தில் நடித்த பிரபலங்களுக்கும் தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது குறிப்பாக நடிகர் ஆர்யாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் குவிகிறதாம்.
உண்மையில் சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க படக்குழு தேர்வு செய்த நடிகர் சூர்யா தான் ஆனால் சில காரணங்களால் அந்த பட வாய்ப்பை அவர் மிஸ் செய்யவே பின் ஆர்யாவுக்கு அந்த வாய்ப்பு திசை திரும்பியதாக கூறப்படுகிறது.