தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித் இவர் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் விதமான படங்களை சமீபகாலமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்கள் நல்லதொரு வரவேற்பை பெற்று.
இதை தொடர்ந்து தற்போது ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்த நிலையில் மீதி படபிடிப்பு ஊரடங்கு உத்தரவு முற்றிலும் முடிந்தபின் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் தொடங்கப்படும் என அஜித் மற்றும் படக்குழுவினர் கூறி யுள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வந்தால் போதும் படத்தை வேண்டும் என்றால் கொரோனா நேரத்தில் யாருக்கும் பாதிப்படையாமால் பொறுமையாக எடுப்பதே நல்லது என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்இருப்பினும் ரசிகர்கள் இந்த டைமில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அல்லது வேறு ஏதேனும் அப்டேட்டை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர்களுடன் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் சமீப காலமாக எதற்கும் செவி சாய்க்காமல் இருந்துவந்த நிலையில் தற்பொழுது இயக்குனர் ஹச். வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என பதிவிட்டுள்ளார் இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.