விஜயின் “பிஸ்ட்” திரைப்படத்தை எடுத்து வரும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்திற்கு முன்பாகவே நடிகர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து “டாக்டர்” என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது. இந்த படத்தை கே ஆர் ஸ்டுடியோ சார்பில் J. ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் SK புரோடக்சன் உடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் அவரும், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்டிருந்தாலும் படம் இன்று வரை வெளிவராமல் இருக்கிறது.
ஒரு வழியாக படம் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்கில் தான் வெளியாகும் என அடித்துக் கூறி உள்ளது தயாரிப்பு நிறுவனம். ராஜேஷ் கூறியது : டாக்டர் திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன் தமிழில் புதுமையான இதுபோன்ற ஒரு பிளாக் காமெடி திரைப்படம் திரையரங்கில் ரசிகர்கள் மிகுந்த அனுபவத்தை தரும்.
சில காரணங்களால் இந்த படம் தள்ளி கொண்டு போய்க் கொண்டே இருந்தது மேலும் அப்போதைய காலகட்டத்தில் OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது அப்போதும் டாக்டர் திரைப்படத்தை நாங்கள் பெரிய திரைக்கு கொண்டு வருவதே முதல் தேர்வாக இருந்தது. அதற்காக அனைவரும் மிக கடினமாக உழைத்து இருக்கின்றனர் இப்பொழுது மீண்டும் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
திரைப்படத்தை திரையரங்கில் கண்டுமகிழுங்கள் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்கள் தங்கள் வியாபாரத்தை புதுப்பிக்கும் மற்றும் மறுமலர்ச்சி அடையவும் டாக்டர் திரைப்படம் நிச்சயம் உதவும் என நம்புகிறேன் எனவும் கூறியிருந்தார்.