தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் லீக் ஆனதாக சில தகவல் இணையத்தில் வெளியானது.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படி தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷின் பரம ரகசியத்தை பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது நடிகர் தனுஷின் உண்மையான பெயர் தனுஷ் கிடையாது என்று கூறியுள்ளார். தனுஷின் அப்பா வைத்த பெயர் வெங்கடேஷ் பிரபு ஆனால் சினிமாவில் இந்த பெயர் செல்லுபடி ஆகாது என்று எண்ணிய தனுஷ் தன்னுடைய பெயரை தனுஷ் என்று மாற்றிக் கொண்டார் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் கமலின் தீவிர ரசிகராக இருந்ததால் கமலின் திரைப்படத்தில் ஒரே ஒரு ராக்கெட்டின் பெயர் தனுஷ் என்று வைத்திருக்கப்பட்டது. அந்த தனுஷ் என்ற பெயரை தன்னுடைய பெயராக மாற்றிக் கொண்டார் தனுஷ் என்று பிரபல பத்திரிக்கையாளர் பல்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
இந்த ரகசியம் பலருக்கு தெரிந்திருந்தாலும் சில ரகசியங்களுக்கு தெரியாமல் இருந்து வருகிறது ஆகையால் இந்த ரகசியத்தை தற்போது பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பொருளாக பேசப்பட்டு வருவது மட்டுமல்லாமல் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து தனுஷ் அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால் இது உண்மையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.