“வசீகரா” படத்தில் விஜயை மிரட்டி நடிக்க வைத்த பிரபலம்.. பல வருடம் கழித்து உண்மையை உடைத்த விமர்சகர்

Vaseegara
Vaseegara

Vijay : தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய். இவர்  தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். பபடத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன் , மிஸ்கின்,மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் , ப்ரியா ஆனந்த் , பிக்பாஸ் ஜனனி  த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.

லியோ படம் மிகப்பெரிய ஆக்ஷன் பேக் திரைப்படமாக உருவாகி உள்ளது. இதனால் லியோ படதிற்கான  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.  இததனை தொடர்ந்து விஜய் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகியது. அதன்படி தளபதி 68 வது திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். வயதான தோற்றம் மற்றும் இளமையான தோற்றம் என கூறப்படுகிறது. இதில் வயதான தோற்றத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து கடைசியாக சினேகாவை லாக் செய்துள்ளனர்.

விஜயும், சினேகாவும் இணைத்து நடித்த வசீகரா திரைப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகியது. இதனால் 20 வருடங்களுக்குப் பிறகு சினேகாவும் விஜயும் ஜோடி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வசீகரா படத்தில் சசிகலா தான் விஜயை மிரட்டி நடிக்க வைத்தார் என ஒரு பேட்டியில் அந்தணன் கூறியிருக்கிறார்.

அவர் கூறியது போயஸ் கார்டனில் இருந்து முதலில் விஜய் இடம் கால்ஷீட் கேட்டனர். அதற்கு விஜய் ஒப்பு கொள்ளவில்லை. பிறகு சசிகலா நீங்கள் உடனே கால்ஷீட் கொடுக்க வேண்டும் என மிரட்டி தான் விஜய் வசீகரா படத்தில் நடித்தார் என்ற பேச்சு அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டதாக அந்தணன் கூறியிருக்கிறார்.