சினிமாவைப் பொறுத்தவரை இயக்குனர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்கள் இயக்கி வரும் நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்தினம்.
இவர் 1953ஆம் ஆண்டு வெளிவந்த பல்லவி அணு பல்லவி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில் அதன் பிறகு ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து சினிமாவில் பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் பல்லாண்டு காலங்களாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை இயக்க வேண்டும் என பலரும் முயற்சித்தனர்.
ஏன் எம்ஜிஆர், கமல் கூட இயக்க முடியாமல் போன நிலையில் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் உருவாகி வெளியானது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியினை கண்டது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகை அமலாபால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தினை பற்றி கூறியிருந்தார். அதாவது இயக்குனர் மணிரத்தினம் திரைப்படத்தின் ஒரு ஆடிஷனுக்கு சென்று இருந்தேன். ஒரு சில காரணத்தினால் அந்த எனக்கு அந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
இப்படிப்பட்ட நிலையில் சிறிது காலங்கள் கழித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டனர். ஆனால் எனக்கு வாய்ப்பு கொடுக்காத காரணத்தினால் நான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் என கூறியுள்ளார். இவ்வாறு தனக்கு வாய்ப்பு கொடுக்காத காரணத்தினால் மணிரத்தினத்தை பழிவாங்கியுள்ளார் அமலா பால்.