தமிழ்,மலையாளம்,ஹிந்தி என தொடர்ந்து ஏராளமான மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதற்கான ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருகிறது.இதன் காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்த பல சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் இதற்காக தொலைக்காட்சிகள் பல கோடிகளை குவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் ஆயிரம் கோடி பணம் கொடுத்தும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர முடியாது என பிரபல நடிகர் கூறி உள்ளாராம்.அதாவது பாலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.அந்த வகையில் 15 சீசன்களை சல்மான் கான் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ஒவ்வொரு சீசனும் அதிகப்படியான வரவேற்பு கிடைத்து வருகிறது அதனால் சில வருடங்களுக்கு முன்பே இந்நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக சல்மான் கான் கூறியிருந்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் பணியாற்றுவதற்காக 350 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்த வேண்டும் என்றால் அதற்கு ஆயிரம் கோடி சம்பளம் வேண்டி என கேட்டுள்ளாராம்.
இவ்வாறு இவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்பதால் தற்பொழுது வேறு ஒரு நடிகரை இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக அழைக்க இருக்கிறார்களாம். மேலும் ஒரு கட்டத்திற்கு பிறகு சல்மான் கான் வைத்து நிகழ்ச்சியை தொடங்கலாம் என ஆயிரம் கோடி தருவதாக ஒப்புக்கொண்டும் சல்மான் கான் ஒத்துக் கொள்ளவில்லையாம்.
இதனால் தற்பொழுது ரோஹித் ஷெட்டியை அணுகலாம் என பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் சல்மான் கான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றி வருவதால் இரண்டினையும் ஒரே நேரத்தில் இரண்டினையும் பார்க்க கடினமாக இருக்கிறது என்பதனால் தான் இவ்வாறு முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.