தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக வருவர் பா. ரஞ்சித். இவர் கடைசியாக எடுத்த சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரமுடன் கூட்டணி அமைத்து எடுத்து வரும் திரைப்படம் தான் தங்கலான் இந்தப் படம் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் என்ன எப்ப எப்படி என்பதை விவரிக்கும் ஒரு படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார் மேலும் பசுபதி, மாளவிகா மோகனன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஹாலிவுட் பிரபலம் டேனியல் கால்டகிரோன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் கடப்பா மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் நடிகை பார்வதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகை.. இவர் இதுவரை நல்ல கதைகளில் உள்ள படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அந்த வகையில் தங்கலான் படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் நடிகை பார்வதி சமீபத்திய பேட்டி தங்கலான் திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர் சொன்னது… நான் நடிகையாக நடிக்க இதுவரை கஷ்டப்பட்டதே இல்லை ஆனால் தங்கலான் படத்தில் நடிப்பது மிகவும் கடினமாக இருந்தது படப்பிடிப்பில் சில இடங்கள் மிகவும் பாராட்டும்படியாக இருந்தது பழங்காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது இதை தியேட்டரில் பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு நிச்சயமாக பெரிய விருந்தாக இருக்கும் என சொல்லி உள்ளார்.
தங்கலான் படம் சூப்பராக இருக்கும் என படத்தில் நடிக்கும் நடிகையை வெளிப்படையாக சொல்லி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த படம் வெற்றி பெரும் பட்சத்தில் பா. ரஞ்சித்துக்கும் சரி, விக்ரமுக்கும் சரி மிகப்பெரிய ஒரு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.