80, 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகராக இருந்தவர் கவுண்டமணி. அந்த சமயத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருந்தவர்களுக்கு இணையாக இவரது பெயர் பேசப்பட்டது கூட மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார் அப்பொழுது பெரிய நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்களோ அதே அளவிற்கு இவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டது.
கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் உருவான நாட்டமை படத்தின் பட்ஜெட் 50 லட்சம் அதில் சரத்குமாருக்கு 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது அதே சம்பளம் தான் கவுண்டமணிக்கும் வழங்கினர். கவுண்டமணி ஒரு படத்தில் இருந்தால் அந்த படம் எப்படியாவது வெற்றி பெறும் என்பது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையாக இருந்தது.
அதனால் அந்த சமயத்தில் பல படங்களில் புக் ஆகியிருந்தார் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றொரு படத்திற்கு திடீரென நடிக்க ஓடிவிடுவார் இப்படி போய்க்கொண்டே இருந்ததால் நேரத்திற்கு சம்பளம் வாங்கும் நடிகராக கவுண்டமணி மாறினார் இப்படிப்பட்ட கவுண்டமணி ஒரு சில நடிகர்களுக்காக மட்டுமே காத்திருப்பாராம்..
அந்த வகையில் கவுண்டமணி செந்திலுக்காக பல தடவை காத்திருக்கிறார் ஏனென்றால் அவன் ஒரு வளர்ந்து வரும் காமெடி நடிகர் அவனுக்காக காத்திருப்பதில் எந்த தப்பும் இல்லை என கூறுவாராம் மேலும் செந்தில் மீது தனி பாசம் கவுண்டமணிக்கு இருந்ததாக பலரும் கூறினர். சில வருடங்களுக்கு முன்பு கூட உடல்நல குறைவு காரணமாக செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் ஆளாக ஓடி வந்து அவரை நலம் விசாரித்தார் கவுண்டமணி என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் செந்திலும் கவுண்டமணியும் அடிப்பதுபோலும் திட்டிக் கொள்வது போலும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுக்கிடையே இப்படி ஒரு பாசம் இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது என ஒரே கமெண்ட் அடித்து வருகின்றனர்.