நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் அஜித்தை வில்லனாக நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளாராம்..
அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தானாம்.. இவர் தற்பொழுது கமலை வைத்து இந்தியன் 2 படத்தை விறுவிறுப்பாக எடுத்து வர மறுபக்கம் தெலுங்கில் நடிகர் ராம்சரணை வைத்து RC 15 என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது படத்தில் ராம்சரண் உடன் கைகோர்த்து எஸ். ஜே. சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி என பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் ஒரு வெயிட்டான வில்லன் ரோல் இருக்கிறது. அதில் நடிக்க மாஸான நடிகரை தான் தற்போது சங்கர் தேடி வருகிறாராம் ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் நடிகர்கள் கிடைக்காததால் தமிழ் சினிமா நடிகர்களை நடிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார் அதன்படி அஜித்தை வைத்து ஏற்கனவே படம் பண்ண ஆசைப்பட்ட ஷங்கருக்கு கிடைத்தது.
இந்த தடவை ஆர்சி 15 திரைப்படத்தில் ஒரு வில்லன் ரோலில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அதுவும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் எப்படி வெயிட்டாக இருந்தது அதே அளவிற்கு பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தை தான் அஜித்திற்கு சொல்லி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்த படத்தில் நடிக்க அஜித் ஓகே சொல்வது சந்தேகம் என கூறப்படுகிறது ஏனென்றால் தொடர்ந்து ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும்..
நிலையில் இதற்கு ஓகே சொல்ல மாட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது மறுபக்கம் அஜித் வாலி, மங்காத்தா போன்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்டு இருப்பதால் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது மறுபக்கம் ஷங்கருடன் நான்கு பட வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில் இந்த பட வாய்ப்பை அஜித் பயன்படுத்தி கொள்ளவர் எனவும் பேசப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..