தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் சமீபத்தில் கடைசி விவசாயி என்ற திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்திருந்தார் இது திரைப்படம் வெகுநாள் கழித்து அவருக்கு ஒரு வரப் பிரசாதம் போல் அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலமாக விஜய் சேதுபதியை பலரும் பாராட்ட ஆரம்பித்தார்கள்.
பொதுவாக விவசாயத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி இருந்தாலும் விஜய் சேதுபதி நடித்த இந்த கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தினை பிரபல அரசியல் கட்சியின் தலைவரான சீமான் அவர்கள் பார்த்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஏனெனில் சமீப காலத்திற்கு முன்பாக தான் சீமான் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் சிலமாதங்கள் ஏற்பட்டது. இவ்வாறு இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் 800 திரைப்படம் தான்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஆனது பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்க இருந்த திரைப்படமாகும் ஆனால் அந்த கிரிக்கெட் வீரர் ஒரு இலங்கைத் தமிழன் என்ற காரணத்தினால் சீமானுக்கு விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.
இதனால் அவர் கட்சி சார்பாக பல்வேறு எதிர்ப்புகள் விஜய் சேதுபதிக்கு வந்ததன் காரணமாக அந்த திரைப்படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி முற்றிலும் தவிர்த்து விட்டார். நமது சீமான் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு மனமார பாராட்டி உள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி தான் சீமானை இந்த திரைப்படத்தை பார்க்க அழைப்பு விடுத்துள்ளார் மேலும் பழைய கசப்பை மறந்து விட்டு சீமானும் அவரை ஏற்றுக்கொண்டு விஜய் சேதுபதி பாராட்டி உள்ளார். இவ்வாறு வெளிவந்த தகவல் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.