விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக நிறைவு பெற்ற முடிந்தது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பரிச்சயமான முகங்கள் கலந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரபலம் ஒருவர் தன்னுடைய திருமணத்தை விரைவில் நடத்த முடிவெடுத்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் இதனை பார்த்துவிட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள்.
அது வேறு யாருமில்லை சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் ஆயிஷா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்தியா சீரியல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் இந்த சீரியலுக்கு முன்பு சில சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அடங்காத துறுதுறு பெண்ணாகவும், தைரியமான பெண்ணாகவும் நடித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார் இதனை அடுத்து ஆல்பம் பாடல்களிலும் நடனமாடி பிரபலமடைந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இவர் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று இந்நிகழ்ச்சியின் பாதியில் இருந்து வெளியேறினார் சமீபத்தில் பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சிகள் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டும் ஆயிஷா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னுடைய காதலரின் முகம் தெரியாதபடி விரைவில் காதலரை அறிமுகம் செய்கிறேன் என கூறி ஹார்டின் சிம்புலை தன்னுடைய கைகளால் காட்டி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் எனவே இதற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்தபொழுது தனலட்சுமி உடன் யோகேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடைய வீட்டில் சம்மதம் தெரிவித்த போதியிலும் தன்னுடைய வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன்னுடைய காதலரை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஆயிஷா கூறி இருக்கும் நிலையில் இன்னும் சில வாரங்களில் ஆயிஷாவுக்கும் அவருடைய காதலருக்கும் திருமணம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மறுபுறம் ஏற்கனவே ஆயிஷாவிற்கு இருமுறை திருமணமாகி விவாகரத்து ஆனவர் என முன்னாள் காதலர் தேவ் என்பவர் பிக்பாஸ் வீட்டில் ஆயிஷா இருந்த பொழுது பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.