எழுதி வச்சுக்கோங்க..! எண்ணி 2 படம் ஹிட் கொடுத்த கமலை கையில கூட பிடிக்க முடியாது என்ற பிரபலம்..!

kamal-3
kamal-3

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் தற்சமயம் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் அரசியலிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்.  ஆனால் இதில் எதில் வெற்றி பெறுவார் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியின் விளிம்பு வரை சென்று பின்னர் தோல்வியை சந்தித்த நடிகர் கமலஹாசன் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வபோது சில கருத்துக்களையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கொண்டுதான் வருகிறார்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் நமது நடிகர் திரைப் படத்தில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறாராம் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் இந்த திரைபடத்தில் மிக விறுவிறுப்பாக நடித்து கொண்டு இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தை மிக தீவிரமாக நடித்து வருவது மட்டுமல்லாமல் மிக விரைவில் திரைப்படத்தை முடிக்க வேண்டும் என கமலஹாசன் திட்டமிட்டுள்ளாராம். இந்நிலையில் கமலைப் பற்றி பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் நடிகரான பயில்வான் ரங்கநாதன் கமலஹாசனை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் அவர் கூறியபோது கமலஹாசன் 2 திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால் போதும் அதற்கு பிறகு அரசியலை தூக்கிப் போட்டுவிட்டு சினிமாவில் முழுமூச்சாக இறங்கி விடுவார் என்று கூறியுள்ளார்.  மேலும் இவர் சினிமாவில் என்னதான் உச்சம் பெற்றிருந்தாலும் அரசியலில் வெறும் முட்டைதான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

kamal-1
kamal-1

இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் கூறியதன் காரணமாக கமல் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் அவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள்.