தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக லியோ என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இவர்களுடைய இரண்டாவது முறையான கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காஷ்மீர் செல்வதற்காக கடந்த வாரம் லியோ பட குழுவினர்கள் தனி விமானத்தில் சென்றிருந்தனர். இந்நிலையில் காஷ்மீர் சென்ற மூன்றே நாட்களில் திரிஷா மீண்டும் சென்னை திரும்பிய நிலையில் அவர் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
எனவே திரிஷா இந்த படத்தில் குறைவான காட்சிகளில் நடிப்பதாகவும், அவருக்கான காட்சிகளை சீக்கிரமாக எடுத்து முடித்து விட்டதாகவும் எனவே லோகேஷ் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும், சொல்லப்போனால் பிரியா ஆனந்த் தான் ஹீரோயின் எனவும், பல தகவல்கள் வெளியானது. மேலும் சில காஷ்மீர் படப்பிடிப்பின் பொழுது லோகேஷ் கனகராஜ் மற்றும் திரிஷாவுக்கு இடையே சண்டை ஏற்பட்டதால் இந்த படத்தில் இருந்து திரிஷா விலகி விட்டதாக கூறி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்பொழுது லேட்டஸ்டாக காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அந்த குளிர் தாங்க முடியாமல் தான் நடிகர் திரிஷா சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இது பற்றிய உண்மையான தகவலை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் வெளியேற்றுள்ளார்.
சமீபத்தில் ஊடக பேட்டி ஒன்றில் பதில் அளித்த இவர் திரிஷா தற்பொழுது காஷ்மீரில் தான் உள்ளார் அவர் சென்னை வந்துவிட்டதாக பரவும் தகவல் துளியும் உண்மை இல்லை அது பற்றி பரவும் தகவல் அனைத்தும் வதந்தி என்று கூறியுள்ளார். எனவே திரிஷா லியோ படத்தில் இருந்து விலகவில்லை என்பது உறுதியாகி உள்ளது இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.