தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா..
பல்வேறு நடிகர் உடன் கிசுகிசுக்கப்பட்டார் அந்த வகையில் சிம்பு, பிரபு தேவா போன்ற நடிகர்களுடன் இவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டது இதற்கு முடிவு கட்ட இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து ஒரு வழியாக கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையும் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் தற்பொழுது இரு மகன்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் உலக தைவக் என் சிவன் என பெயர் சூட்டியுள்ளனர். விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒரு பக்கம் சினிமா உலகில் ஜொலிக்க மறுபக்கம் குழந்தைகளுடன் வாழ்க்கையை இனிமையாக பொழுதை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் நயன்தாரா பற்றி பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
அந்தணனிடம் நிருபர் நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அவரது திரைப்படங்களுக்கான அப்டேட் வரவே இல்லையே என கேட்டு இருக்கிறார். இதற்கு அந்தணன் பதில் அளித்தது.. நயன்தாரா தனக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாக இருப்பதால் கம்மி பட்ஜெட் படம் எடுத்து அதனை OTT யில் அதிகமாக விற்று விடலாம் என நினைக்கிறார் நயன்தாரா connect திரைப்படத்தை தயாரித்து நடித்தார் ஒருவேளை அறம் மாதிரியான ஒரு திரைப்படத்தை தயாரித்து ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தால் நயன்தாராவின் மார்கெட்டை நயன்தாரா நினைத்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது.
நயன்தாரா என்ன செய்கிறார் என்றால் கமர்சியலாக ஒரு விஷயம் செய்து எப்படியாவது தனது பாக்கெட்டை நிரப்பினால் போதும் என நினைக்கிறார். அதற்குத்தான் இயற்கை அவருக்கு தண்டனை கொடுக்கிறது இந்த சினிமா தானே உங்களை வளர்த்து விட்டது அதே சினிமாவை தாங்கள் தவறாக பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு மார்க்கட் கீழே இறங்குகிறது இந்த தவறை அவர் செய்ததுதான் அவரது மார்க்கெட்டின் பின்னடைவுக்கு காரணமான கூறி இருக்கிறார்.