இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு கூட நுழைய முடியாமல் வெளியேறியது. ரசிகர்களை எப்படி பாதித்ததோ அதுபோல பிசிசிஐக்கு செம கடுப்பை கொடுத்துள்ளது. இதனையடுத்து பிசிசிஐ புதிதாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இனி ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவித்தது.
இதனை தொடர்ந்து இந்தியா நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தது இதில் முதலில் கோலி இல்லாத காரணத்தினால் ரகானே கேப்டன்ஷிப் செய்தார் கோலி இரண்டாவது போட்டிக்கு வந்தவுடன் அந்த பொறுப்பை அவருக்கு கொடுதகொடுத்து பிசிசிஐ டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்னாக கோலி செயல்பட விட்டுள்ளது.
அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் இவர் கேப்டனாக இருக்க ஆசைப்பட்டார் ஆனால் பிசிசிஐ அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்க 48 மணி நேரம் அவகாசம் கொடுத்தது ஆனால் கோலி கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகாமல் இருந்தார் இருப்பினும் பிசிசிஐ அவரை அந்த பொறுப்பிலிருந்து நகர்த்திவிட்டு ரோஹித் சர்மாவை ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை கொடுத்து அசத்தி உள்ளது.
காரணம் 20 ஓவர், ஒரு நாள் போட்டிகளில் ஒரே ஒரு கேப்டன் இருந்தால் போதும் அதை விட்டு விட்டு மாறி மாறி கேப்டன்கள் இருந்தால் அது வீரர்களின் எண்ணங்களை மாற்றும் என கருத்தில் கொண்டு ரோகித் சர்மா கையே கேப்டனாக நியமித்தது. ஏற்கனவே 20 ஓவர் பார்மட்டர் ரோஹித்தை கேப்டனாக போட்ட நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் அவர் கேப்டனாக போட்டுள்ளது.
துணை கேப்டனாக கோலியை நியமிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பொறுப்பையும் வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளது 29 வயதான இளம் வீரரான கேஎல் ராகுலுக்கு அந்த பொறுப்பு தற்போது கிடைத்துள்ளது. இதனால் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோலிக்கு எந்த ஒரு கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்பும் இல்லை என்பது அடித்து சொல்லப்பட்டுள்ளது.