“டெல்லி கேப்பிடல்” அணியில் கேப்டன் மாற்றம் வேண்டும் – இந்த வீரரை போடுங்கள் சிறப்பாக இருக்கும்.! கம்பீர் அதிரடி..

gambhir
gambhir

ஐபிஎல் 14 வது தொடர் ஒரு வழியாக முடிந்து விட்டது. ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி சென்றது.  இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்தே கடைசிவரையும் சிறப்பாக விளையாண்டு அனைவரது மத்தியிலும் நல்ல அணியாக இருந்து வந்தது டெல்லி கேப்பிடல் அணிஆனால் அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடம் கடைசி ஓவரில் தோற்றது.

இருப்பினும் ரசிகர்கள் டெல்லி கேப்பிடல் அணியை புகழ்ந்து தான் பேசி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கௌதம் கம்பீர் 2022 ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்  அணியில் கேப்டனை மாற்றவேண்டும் என ஒரு பரபரப்புச் செய்தியை கூறியுள்ளார்.

மேலும் இவரை கேப்டனாக போடுங்கள் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என ஒருவரை சொல்லியுள்ளார்.  அந்த கிரிக்கெட் வீரர் வேறு யாருமல்ல சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் தற்போது டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவர் கேப்டனாக போடுமாறு கேட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தேவைக்கு ஏற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மற்றும் இதுவரை பல்வேறு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து உள்ளதால் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது நிச்சயம் அவர் டெல்லி கேப்பிடல்  அணியை சிறந்த ஒரு இடத்தை எடுத்து செல்வார் என கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

மேலும் சில சுழற்பந்துவீச்சாளர்களை எனக்கு பிடிக்கும் ஆனால் மிகவும் பிடித்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ரொம்ப பிடித்த வீரர் என அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார் இச்செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ரிஷப் பண்ட் சிறப்பான வீரர்களை வைத்துக்கொண்டு சிறந்த முறையில் வெற்றியை கொடுத்திருந்த நிலையில் தற்போது ஏன் அவரை தூக்க வேண்டாம் என பலரும் கேள்வி எழுப்பி கமெண்ட் அடித்து வருகின்றனர்.