வெடித்தது கோபியின் சுயரூபம் நடுத்தெருவுக்கு வரப்போகும் பாக்கியலட்சுமி.? வெடித்தது புதிய பிரச்சனை…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடைய மிகவும் பிரபலம் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதேபோல் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக எபிசோட் போய்க் கொண்டிருக்கிறது இந்த நிலையில் கோபி தன்னுடைய பழைய வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது அங்கு இருக்கும் போர்டை பார்க்கிறார் அதில் கோபியின் பெயர் எடுக்கப்பட்டு பாக்கியலட்சுமி பெயர் இருக்கிறது இதனை பார்த்து மிகவும் காண்டாகிறார் கோபி.

பின்பு ராதிகா வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி சண்டை போடுகிறார் கோபி அது மட்டுமில்லாமல் ராதிகா விடமும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டுகிறார். பின்பு தன்னுடைய பழைய வீட்டிற்கு வந்து பாக்கியலட்சுமியை பார்த்து அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுகிறாயா என வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த வீட்டிலிருந்து என் பெயரை மாற்றி விட்டால் இந்த வீடு உனக்கு சொந்தமாகி விடுமா என கேட்கிறார் அந்த மாதிரி பண்ண உனக்கு வெக்கமா இல்லையா என கீழ்த்தரமாக பேசுகிறார் கோபி உடனே இல்ல அங்கிள்  அவர்கள் செய்யல எழில் தான் செய்தார் என கூற உடனே இல்லமா எழில் செய்யவில்லை இவ்வதான் தூண்டி செய்ய வைத்திருப்பார் என கோபி செம காண்டில் கத்துகிறார்.

உடனே ராமமூர்த்தி என்னடா பேசிட்டு இருக்க அவளுக்கு வேற வேலை இல்லையா எனக் கூற அப்பா நீங்க பேசாதீங்க என்ன பேச விடுங்க என கோபி கத்துகிறார் மேலும் டிவோஸ் வாங்குனப்ப எதுவுமே வேண்டாம் என சொன்ன இப்ப என்னோட வீடு மட்டும் வேணுமா. அது அப்பவே கேட்டு தொலைய வேண்டியது தானே சொத்துல பாதி பங்கு வேண்டும் என்று என கோபி கத்துகிறார்.

தெரியாம தான் கேட்கிறேன் இதெல்லாம் பன்றியே உனக்கு அசிங்கமா இல்லையா என கோபி கூறுகிறார் உடனே பாக்கியலட்சுமி வாடி போடி என்று எல்லாம் பேசாதீங்க மரியாதையாக பேசுங்க எனக் கூற உனக்கு என்னடி மரியாதை என கோபி திட்டி தீர்க்கிறார். இத்தனையும் கேட்டுக் கொண்ட பாக்கியலட்சுமி அமைதியாக இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கோபி வீட்டிற்கு வெளியே இருக்கும் பாக்கியலட்சுமி போர்டை உடைத்து வீட்டுக்குள்ளே தூக்கி எறிகிறார் இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் மொத்தத்தில் பாக்கியலட்சுமியை  வீட்டை விட்டு வெளியே துரத்த கோபி முடிவு செய்துவிட்டார்.

Leave a Comment

Exit mobile version