படத்தின் பட்ஜெட் கம்மி ஆனா வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அந்த படங்களின் லிஸ்ட் இதோ.

சமீப காலமாக சினிமா உலகில் மிகப்பெரிய  பட்ஜெட் படங்கள் அதிக வசூலை ஈட்டி தரும் என கணக்கு போட்டு சில தயாரிப்பு நிறுவனங்கள் டாப் இயக்குனர்கள், டாப் ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்து வருகின்றனர்.

அந்தப் படங்களும் போட்ட பட்ஜெட்டை விட அதிக லாபத்தை பெற்றுத் தருகின்றன இது இப்படி இருக்க ஒரு சில இயக்குனர்கள் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தை ஈட்டுவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக குறைந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வசூலை அள்ளி தருவதால் இயக்குனருக்கும் பெருமையே தருகின்றன அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தைத் அந்த படங்களை தற்போது பார்ப்போம்.

1.  தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் இணைந்து 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 4 லட்சம் ரூபாய் தானாம் இந்த திரைப்படத்திற்காக கமல் 20 ஆயிரமும் ரஜினி சம்பளமாக30 ஆயிரமும் கேட்டாராம் இருப்பினும் படக்குழு அதற்கு ஒத்துக்கொண்டு கொடுத்தது இந்த திரைப்படமும் திரை அரங்கில் வெளிவந்து கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்தது.

2. பெரும்பாலும் சினிமா உலகில் புதுமுக நடிகர்களின் படங்கள் பெருமளவு வெற்றியை சந்திப்பது அல்ல ஆனால் 1980 ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் அதில் நடித்த பலரும் புதுமுக நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் நடிப்பு மக்களிடையே சென்றடைந்தது இந்த திரைப்படமும் 3 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்எடுக்கப்பட்டிருந்தது படமும் வெளிவந்து மக்கள் ஆதரவை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது இந்த திரைப்படமும் 15 லட்சம் வசூல் சாதனை படைத்தது.

3. பாடகராக சினிமா உலகில் அறிமுகமாகி பின் நடிகராக வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இவர் கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்த இந்த படத்தில் அவருடன் இணைந்து ராதிகா நடித்தார். இந்த திரைப்படத்தை வசந்த் இயக்கியிருந்தார் கம்மி பட்ஜெட்டில் மிகப்பெரிய லாபத்தை கொடுத்த திரைப்படம் கேளடி கண்மணி.

4. சசிகுமார் இயக்கி நடித்த திரைப்படம்  சுப்ரமணியபுரம் இந்தப் படம் இரண்டு கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டது இந்த திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலில் 8 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

5. முரளி நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுவசந்தம் இந்த படம் 28 லட்சம் ரூபாய் என்று எடுக்கப்பட்டது ஆனால் வசூலில் 1 கோடிக்கு மேல் அள்ளிவந்து.

6. சிவகுமார் நடிப்பில் ஆயிரத்து 1970 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணகிளி இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் இது இவருக்கு முதல் திரைப்படமாகும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து சுமார் 40 லட்சத்துக்கு மேல் வசூல் ஈட்டியது இந்த திரைப்படம் வெறும்  4 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது.