தெலுங்கு சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய சிறப்பான படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவின் தாண்டி இந்திய அளவில் அவரை தூக்கிச் சென்றது சினிமா உலகம்.
இதன் மூலம் அவரது மார்க்கெட்டை உயர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சம்பளத்தையும் அதிகரித்துக் கொண்டார் தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் இவர் புதிய கூட்டணியுடன் இணையஉள்ளார். அந்த கூட்டணி பல அவார்டுகளை பெற்று உள்ளது.
பிரபாஸ் இணையும் படத்தின் இயக்குனர் இதற்கு முன்பு நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கி பல அவார்டுகளை பெற்றது அதிலும் குறிப்பாக இந்திய திரைப்பட விருதை அந்த படத்திற்கு வழங்கியது பெருமைப்படுத்தியது இப்படத்தை நாகா அஷ்வின் அவர்கள் இயக்கியிருந்தார்.
தற்பொழுது பிரபாஸ் உடன் இணைந்து 400 கோடி பட்ஜெட் படத்தில்எடுக்க உள்ளார் இப்படத்திற்காக அவருக்கு 70 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இவருடன் இணைந்து தீபிகா படுகோன் நடிக்க உள்ளார்.
அவருக்கு சுமார் 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இவர்கள் இருவருமே சிறப்பாக நடிக்க கூடியவர்கள் என்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.மேலும் இப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என தெரியவருகிறது.