தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக கிராம கதைகளில் நடிக்க வேண்டும் என பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் அந்த வகையில் இயக்குனர் சுகுமார் சொன்ன புஷ்பா படத்தின் கதை அல்லு அர்ஜுனுக்கு ரொம்ப பிடித்துப் போகவே..
அந்த படம் அதிரடியாக உருவானது 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ராஸ்மிகா மந்தனா மற்றும் பல தெலுங்கு பிரபலங்கள் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்தியா முழுவதும் சூப்பராக ஓடியது.
அதன் காரணமாகவே இந்த திரைப்படம் சுமார் 350 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் அதிரடியாக தற்பொழுது உருவாகி வருகிறது இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம்.
மலை மற்றும் காடுகளில் படமாக்கப்படுவதால் இந்த படத்திற்காக ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜுன் அவர்களுக்கு அதிகமும் சம்பளம் கொடுக்கப்பட பட குழு திட்டமிட்டுள்ளதாக கூறியது இப்படி இருக்கின்ற நிலையில் அதற்கான தகவலும் கிடைத்துள்ளது புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு 45 கோடி சம்பளம் கொடுத்துள்ளனர்.
இரண்டாவது பாகத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளமே வேற.. புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் 85 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புஷ்பா இரண்டாவது பாகம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம்.