அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை இந்த படத்தை மிக பிரமாண்ட பட்ஜெட்டில் போனிகபூர் தயாரித்துள்ளார் இந்த திரைப்படம் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து படம் ரிலீஸ் ஆகும் வரை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் படம் சிறப்பாக வந்துள்ளதால் நிச்சயம் எப்பொழுது வெளியானாலும் பெற்றிருக்கும் என கணக்கிட்டுள்ளது முதலில் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது ஆனால் சில காரணங்களால் வெளியிடாமல் போனது இதனை அடுத்து வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி கன்னடம் தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் அதாவது உலக அளவில் படம் வெளியாக இருக்கிறது அதனை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் படம் எந்த சான்றிதழைப் பெற்று உள்ளது. எவ்வளவு நேரம் ஓடுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. 2.50 நிமிடங்கள் ஓடும் எனவும் சென்சார் யுஏ சான்றிதழ் பெற்று உள்ளதாக தெரியவருகிறது மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படத்தினை வெளிநாட்டில் அதாவது பிரிட்டிஷ் இல் வெளியிட்ட அங்கு சென்சார் போர்டு அறிவித்துள்ளது. காட்சிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன அதில் வலிமை படத்தின் கதை என்பது தகவல் வெளியாகி உள்ளது. பெரிய அளவிலான போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பைக் கும்பலை தமிழக போலீசார் எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை சொல்லும் படம்தான் வலிமை.
சன் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இங்கிலாந்து அயர்லாந்து ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் வலிமை படம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு சான்றிதழ் அளித்துள்ளது பிரிட்டிஷ் 178 நிமிடங்கள் வரை வலிமை படத்தின் நீளம் என அறிவித்துள்ளது.
இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் நிறைந்திருப்பதால் நிச்சயம் இந்த திரைப்படம் வெளிநாட்டிலும் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.