லவ் டுடே படத்தை போல் செல்போனை மாற்றிக் கொண்டு பெண்ணிடம் வசமாக சிக்கிய மணமகன்.! லாக்கப்பில் வைத்து லத்தி அடி…?

love-today
love-today

லவ் டுடே படம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த நிலையில் சமீப காலமாக காதலிக்கும் நபர்கள் தங்களுடைய செல்போனை மாற்றிக் கொண்டு பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள் அப்படிதான் நிச்சயமான பெண்ணுடன் தனது போனை மாற்றிக் கொண்டு போஸ்கோ சட்டத்தின் கீழ் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய திரைப்படம் தான் லவ் டுடே இந்தத் திரைப்படத்தில் காதலிக்கும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள் ஆனால் அந்தப் பெண்ணின் அப்பா இரண்டு பேரும் உங்களுடைய செல்போனை மாற்றிக் கொண்டு ஒரு நாள் இருங்கள் அதற்குப் பிறகு உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என ட்விஸ்ட் வைப்பார். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கதை.

படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது எதார்த்தமாக பல காட்சிகளை காட்டியிருந்தார்கள் அதனால் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்தத் திரைப்படத்தைப் போலவே நிஜத்திலும் நிச்சயமான மணமகன் மற்றும் மணமகள் இருவரும் தங்களுடைய செல்போனை மாற்றிக் கொண்டு போஸ்கோ  சட்டத்தில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை சேர்ந்த வேலூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் இவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆக பணிபுரிகிறார்  இவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நிச்சயமானது அந்தப் பெண் லவ் டுடே திரைப்படத்தின் பாணியில் செல்போனை மாற்றிக் கொள்ளலாம் என கூறியுள்ளார் ஆனால் முதலில் அரவிந்த் என்பவர் மறுத்துள்ளார்.

பின்பார் அந்த பெண்ணின் பிடிவாதத்தால் அரவிந்த் சம்மதித்து செல்போனை மாற்றிக் கொண்டார்கள் மணமகனின் போனை தீவிரமாக ஆராய்ந்த மணமகள் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது அந்த செல்போனில் ஸ்கூல் படிக்கும் பெண்ணின் வீடியோ இருந்துள்ளது. அந்தப் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

அரவிந்த் செய்த லீலைகளை மணமகள் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிவு செய்தார் நிச்சயமான அந்த பெண் உடனடியாக அந்த வீடியோவில் இருக்கும் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த அனைத்து விஷயங்களையும் கூறி இருக்கிறார் இதனை அடுத்து அந்தப் பள்ளிப் பெண்ணின் பெற்றோர் அரவிந்த் மீது வாழப்பாடி மகளிர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் பின்னர் அரவிந்தை பிடித்து விசாரணை செய்து போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

பின்பு நிச்சயமான அந்தப் பெண் அரவிந்தை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.