பார்த்திபனை சரமாரியாக வச்சி செய்த ப்ளு சட்டை மாறன்.! அனால் பறக்கும் ட்வீட்…

parthiban
parthiban

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், என பன்முகத் தன்மை கொண்டு சினிமாவில் ஜொலித்து வரும் பார்த்திபனை சரமாரியாக  கேள்வி கேட்டு விளாசியுள்ளார் ப்ளு சட்டை மாறன். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்டது என கூறி பாரதிபன் இரவின் நிழல் திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்து வந்தார்.

அந்த சமயத்தில் ப்ளூ சட்டை மாறன் பார்த்திபனை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பார்த்திபனுக்கும் ப்ளு சட்டை மாறனுக்கும் இடையே ட்விட்டரில் இருவரும் மாறி மாறி டுவிட் போட்டு விமர்சிக்க ஆரம்பித்தனர்.

அதன் பிறகு இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி இருவரும் அமைதியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன் அப்போது இரவின் நிழல்  115 விருதுகளை வாங்கி குவித்து இருந்ததும் அதனால் நிறைய சூடு பட்டு விட்டேன் என்று சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபன் வருத்தத்தோடு கூறியிருந்தார்.

சும்மாவே நடிகர்களையும் திரைப்படங்களையும் விமர்சித்து வரும் ப்ளு சட்டை மாறன் பார்த்திபனை மட்டும் சும்மா விடுவாரா என்பது போல  பார்த்திபன் உடைய இந்த கருத்துக்கு  ப்ளூ சட்டை மாடல் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது 115 விருதுகளை குவித்துள்ளீர்கள் என்று கூறி இருக்கிறீர்களே அதை மீடியா முன்பு காட்ட முடியுமா? இதை யார் தந்தனர் பட்டியல் உண்டா? என்று பார்த்திபனுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

ஏற்கனவே இரவு நிழல் திரைப்படத்தின் போது பார்த்திபன் மற்றும் ப்ளு சட்டை மாறனும் அடித்து கொள்ளாத ஒரு குறையாக இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர் இந்த நிலையில் பார்த்திபன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் 115 விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறோம் என்று கூறியதும் ப்ளு சட்டை மாறன் தனது பங்குக்கு வைத்து விளாசி உள்ளார். அதுமட்டுமல்லாமல்  உங்களுடைய இந்த திரைப்படம் புகழ்பெற்ற விருது நிகழ்ச்சிகளில் கூட உங்கள் படம் விருது பெறவில்லை என்றும் ஒரு விளாசு விளாசி உள்ளார்.