சினிமா உலகில் தற்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை அனிகா. இவர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார்.
இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் தல அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நடித்த இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் சினிமா உச்சிக்கே அவரை எடுத்துச் சென்று அழகு பார்த்தது தமிழ் சினிமா.
இப்படி சினிமா உலகில் கொடிகட்டி பறந்து வரும் இவர் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் நடத்தி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது வெளியிட்டு வந்தார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஆதரவைக் கொடுத்து வந்தாலும் ஒரு சிலர் இவரை விமர்சித்து வந்தனர்.
அப்படி ஒருவர் எல்லை மீறி கமெண்ட் அடித்ததைப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் நடிகை அபிராமி அவர்களும் அவருக்கு பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் நடிகை அபிராமி கூறியுள்ளது.
மேலும் அவர் சின்ன குழந்தைகள் கூட விட மாட்டீர்களா என்று ஆக்ரோஷமாக அவரை விமர்சித்துள்ளார் இவர் இவ்வாறு பேசுவது அதற்கு முக்கிய காரணம் அனிதாவின் புகைப்படத்தை பார்த்த இணைய வாசி ஒருவர் நீங்கள் ரொம்ப ஹாட்ட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கிறீர்கள், ஐ லவ் யூ என்று கமென்ட் அடித்தார்.
இதற்காகத்தான் அபிராமி அவர்கள் இவ்வாறு பேசினார் மேலும் அவர் இவரைப் போன்றவர்களை சைபர் கிரைம் மூலம் கண்டுபிடித்து அவர்களைப் போன்றவர்களை ஜெயிலில் அடைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இவரைப்போன்று பிரபல யூடியூப் சேனலான பிலிப் பிலிப் சேனல் அனிதாவுக்கு இது போன்ற கமெண்ட் அடித்தவருக்கு போன் செய்து அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் உங்களை கைது செய்ய முடியும் எனவும் கூறியிருந்தனர். இது போன்ற பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.