தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. கடைசியாக இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன அதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்து வந்தார் அந்த வகையில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் கார்த்தி கையில் இருந்தன.
இதில் முதலாவதாக விருமன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த ஒரு கலவையான திரைப்படமாக இது உருவாகியிருந்தது.
படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது. அதற்கு ஏற்றார் போலவே வசூல் வேட்டையும் கண்டது தொடர்ந்து இந்த படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தி ஒரு சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்து உள்ளார்.
அது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம். அதாவது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது இந்த படத்தின் கதையை முதலில் பா ரஞ்சித் நடிகர் கார்த்தியிடம் சொல்லி உள்ளார். முதலில் கார்த்தி ஒப்பந்தமானாராம்.
ஆனால் அந்த சமயத்தில் இவர் பொன்னியின் செல்வன் மற்றும் பல படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் பா ரஞ்சித் கார்த்தி கூட்டணி இணைய முடியாமல் போனதாம் பிறகு பா ரஞ்சித் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்ததாக சொல்லப்படுகிறது படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு கார்த்தி இப்படி ஒரு பிளாக்பஸ்டர் படத்தை மிஸ் செய்து விட்டோமே என ரொம்பவும் வருத்தப்பட்டாராம்.