அஜித் நடிப்பில் உருவான வாலி திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை ஜோதிகா. ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென இருந்ததால் ஆரம்பத்திலேயே ரசிகர்களை பெரிதாக கவர்ந்து இழுக்க படங்களில் கிளாமர் மற்றும் சென்டிமென்ட் ரொமான்டிக் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும்..
பின்னி படலெடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது மேலும் குறைந்த படங்களிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஜோதிகா அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கமல் போன்றவர்களுடன் நடித்தார். ஒரு கட்டத்தில் சூர்யாவை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சிறு இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் திரைப்படத்தில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் இருப்பினும் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் கெட்டை வார்த்தை பேசினார் இதை ரசிகர்கள் கொண்டாடினாலும் சூர்யாவின் குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை அதன் பிறகு ஜோதிகாவுக்கு ஒரு கட்டளையும் விட்டது அதாவது இனி நீ படங்களில் நடிக்க கூடாது என ஒரு மிகப்பெரிய தண்டனையை கொடுத்தது.
இதற்கு சூரியவும் ஒன்னும் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார் ஒரு கட்டத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாகும் ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டி வந்தார். தற்பொழுது அதிலேயும் ஜோதிகா நடிக்கவில்லை என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சாய் பல்லவி நடிப்பில் உருவான கார்கி திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது ஜோதிகா தானாம். சூர்யா குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை அதனால் ஜோதிகா இந்த படத்தில் நடிக்கவில்லை அதன் பிறகு தான் சாய் பல்லவிக்கு இந்த படம் போனதாக கூறப்படுகிறது ஜோதிகாவுக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்தாலும் சூர்யா குடும்பத்தினர் தலையசைத்தால் மட்டுமே அவர் நடிக்க முடியுமாம்.