தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் ஒரே தினத்தில் மோதிக் கொண்டு பல வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது பொங்கல் தினத்தில் மீண்டும் இவர்கள் இருவரும் மோத உள்ளனர்.
அதாவது அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகியுள்ளதால் இந்த இரண்டு படத்திற்கு மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் மற்றும் அஜித் நடித்து வரும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த இரண்டு படங்களும் சரி பாதியாக பிரித்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். வாரிசு படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியுள்ளார் தெலுங்கு பட அதிபர் திலராஜ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். பொதுவாக தெலுங்கில் விஜய் படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பு உள்ளது இந்த படத்தை ஆந்திரா தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார் தில்ராஜ்.
இதேபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா தெலுங்கானாவில் சரிபாதியான திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர் இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் படங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என்று உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலைகள் பொங்கலுக்கு சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள வால்டர் வீரய்யா திரைப்படமும் பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர நரசிம்ம ரெட்டி மற்றும் அகில் நடித்துள்ள ஏஜென்ட் ஆகிய மூன்று திரைப்படங்களும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் இந்த மூன்று திரைப்படங்களுக்கு மட்டும் அதிக தியேட்டர்கள் ஒதுக்கும்படி தியேட்டர் அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது.
இதனால் விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படங்களுக்கும் கூடுதல் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.