கன்னட சினிமா மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீள் கேஜிஎப் திரைப்படத்தை இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தவர் அந்த வகையில் கேஜிஎப் திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது இந்த நிலையில் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இரண்டாவது பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎஃப் இரண்டாவது பாகத்தை படக்குழு வெளியிட்டது இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கேஜிஎப் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் கேஜிஎப் திரைப்படம் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையை KGF மூன்றாவது பாகம் எப்போது வெளியாகும் அதன் அறிவிப்பு எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
ராம்கோபால் வர்மா எப்பொழுதும் சர்ச்சையான கருத்தை கூறுவதில் கைதேர்ந்தவர் அந்த வகையில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை மட்டுமல்லாமல் சர்ச்சையான படங்களையும் இயக்குபவர் அந்த வகையில் தற்போது இவர் கூறியுள்ளது மிகப்பெரிய வைரலாகி வருகிறது.
அதாவது கேஜிஎப் இரண்டாவது பாகத்தை வெளியிட்டதால் பாலிவுட் திரைப்படங்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறது அதிலும் அஜய் தேவகன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் KGF திரைப்படத்துடன் மோதி தோற்றுள்ளது. இது தென்னிந்திய சினிமாவில் பலத்தை காட்டுகிறது என கிண்டலாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.