கே ஜி எஃப் 2 படத்தை தொடர்ந்து நடிகர் யாஷை தேடி வந்த மிகப் பெரிய பட வாய்ப்பு..

yaash
yaash

அண்மைகலமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன.. அந்த வகையில் பாகுபலி பாகுபலி 2 போன்ற படங்கள் வெற்றி பெற்றன அதனைத் தொடர்ந்து கேஜிஎப் படமும் வெற்றி பெற்றன அதன் காரணமாக இந்த திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர்கள் பெரிய அளவில் பிரபலம் அடைந்தனர்.

அவர்களின் ஒருவராக பிரபலமடைந்து இருப்பவர் தான் கன்னட நடிகர் யாஷ். இவர் நடித்த கே ஜி எஃப் மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவரை தேடி செல்கின்றன ஆனால் சிறப்பான கதைகளை மட்டுமே அவர் தேர்வு செய்கிறாராம்..

இந்த நிலையில் ரன்பீர்  கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியாகிய.. ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிரம்மாஸ்திரா இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை மிக விரைவிலயே இயக்க படக்குழு திட்டமிட்டுள்ளது இதில் சில முக்கிய வேடத்தில் ஹர்திக் ரோஷன், ரன்வீர் சிங் ஆகியோர்களை..

நடிக்க வைக்க இயக்குனர் ராயன் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் மறுத்து விட வேறு வழி இல்லாமல் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் யாஷிடமும் அந்த வேடத்தின் கதையை கூறியுள்ளனர் ஆனால் அதை நடிகர் யாஷுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது. ஆனால் பட குழு விடாமல் பேச்சு வார்த்தை நடத்தியது.

கடைசியாக தயாரிப்பாளர் காரண ஜோக்கர் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் பட குழு இரண்டு முறை சந்தித்த பொழுதும் பிரம்மாஸ்திரா 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் என கூறி பட குழுவை அனுப்பி விட்டாராம்.. இதுப்போன்ற பல புதிய பட வாய்ப்புகளை அவர் தவிர்த்து வருகிறார்.