தயாரிப்பாளரை தலையில் துண்டு போட வைக்கும் மிகப் பெரிய பட்ஜெட் படங்கள்.! மொத்தம் எத்தனை படம் இருக்கும் தெரியுமா.? பார்த்த உங்களுக்கே தலை சுத்தும்.

தென்னிந்திய திரையுலகில் மிகப் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் வெகு குறைவு தமிழில் இயக்குனர் ஷங்கர் என்றால் தெலுங்கில் ராஜமவுலி இவர்கள் இருவரும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டு உள்ளதால் தற்போது அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் பலரும் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்க ஆயத்தமாகி உள்ளனர்.

அந்த வகையில் பல்வேறு மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் திரையுலகில் வெளிவர காத்திருக்கின்றன ஆனால் கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது படத்தை எடுக்க முடியாத சூழலிலும் ஆங்காங்கே நிகழ்வதால் பெரிய பட்ஜெட் படங்கள் போட்ட காசை விட தற்பொழுது இன்னும் அதிக பணம் செலவு செய்தால் எடுக்க முடியும்  இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிச்சிகொண்டு இருக்கின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்  படங்கள் இன்னும் எடுக்க முடியாமல் தத்தளிக்கின்றன. அந்த வகையில் மொத்தம் எத்தனை படங்கள் லிஸ்டில் இருக்கின்றன என்பதை தற்போது பார்போம். மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மரைக்காயர். தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படமும் இன்னும்  ஷூட்டிங் எடுக்க வேண்டியது உள்ளதால் அதுவும் கிடப்பில் கிடக்கிறது.

அதுபோல மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன், அல்லு அர்ஜுன் புஷ்பா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா போன்ற மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் தற்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்த திரைப்படங்கள் போன ஆண்டு வரவேண்டிய திரைப்படங்கள்தான் ஆனால் கொரோனா அச்சம் காரணமாக படத்தை தள்ளி கொண்டு போனால்தான் தற்போது வரையிலும் எடுக்க முடியாத சூழல் நிலவி உள்ளது இதற்காக பல படிகளை போட்டுள்ள தயாரிப்பு நிறுவனங்களும் இன்னும் சில கோடிகளை போட்டால் மட்டுமே படத்தை எடுக்க முடியும் என்பதால் முழி பிதுங்கி போய் உள்ளனர்.

திரையரங்குகளில் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது படத்தை ரிலீஸ் செய்துவிட்டு போட்ட காசை எடுத்து விட வேண்டும் என தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.