மக்கள் செல்வன் என்று வெள்ளித்திரையில் அனைவராலும் அழைக்கப் பட்டு வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழில் தவிர்க்க முடியாத நடிகராக தற்பொழுது வலம் வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இவருக்கு தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போகிறது அந்த வகையில் இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வரிசையாக வெளியாகுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பார்த்தால்.
இவரது நடிப்பில் செப்டம்பர் 9ம் தேதி எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் வெளியாகிறது அதேபோல் செப்டம்பர் 10-ஆம் தேதி இவர் நடித்த துக்ளக் தர்பார் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது.
இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் டாப்சீயுடன் இணைந்து ஆனேபல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளாராம்.
அதில் இவர் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது ஆனால் என்னால் இதை விட முடியவில்லை இதை கூடிய சீக்கிரம் நான் விட வேண்டும் என நினைக்கிறேன் எப்படியாவது இந்த கெட்ட பழக்கத்தை நான் விட்டுவிட்டால் மிகவும் நன்றாக இருப்பேன் என கூறியுள்ளாராம் மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்காக இவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.