சமீப காலங்களாக அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மிகவும் ஃபேமஸாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்நிகழ்ச்சி முதன் முதலில் ஹிந்தியில் தான் துவங்கப்பட்டது அதன் பிறகு தான் மற்ற மொழிகளிலும் அறிமுகமானது.
அந்த வகையில் தமிழில் கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதியிலிருந்து 6வது சீசன் துவங்க இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் பிரபல அனுராதாவின் மகளும் நடிகையுமான அபிநயா ஸ்ரீ சமீபத்தில் துவங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிகழ்ச்சி துவங்கப்பட்ட இரண்டாவது வாரத்திலேயே இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் அபிநயஸ்ரீ. இவர் வெளியிட்டிருக்கும் பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் பித்தலாட்டத்தை குறித்து ஆவேசத்துடன் பேசியுள்ளார் அதில் அவர் கூறியதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் நினைப்பது போல் பிக்பாஸ் வீட்டில் நடப்பது இல்லை.
உண்மையை சொல்லப்போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் டாஸ் செய்தது போன்றவை எல்லாம் காட்டப்படாமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே காட்டி டிஆர்பியை ஏற்றுவதற்காக தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து நான் நாமினேஷனில் இருந்து பிறகு மக்கள் ஓட்டின் மூலம் காப்பாற்றப்பட்ட பிறகும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளேன்.
அவர்களுக்கு யாரை காப்பாற்ற வேண்டும் யாரை எலிமினேட் செய்ய வேண்டும் என முன்கூட்டியே தீர்மானித்து வைத்துள்ளார்கள் அதன்படி தான் இந்நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது. அப்படி இருக்கும் பொழுது எதற்கு தேவையில்லாமல் ரசிகர்களை ஓட்டு போட வைக்கிறார்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்கப்பட்டுள்ளார்.
மேலும் பிக்பாஸ் தமிழில் கமலஹாசன் அனைத்து போட்டியாளர்களிடமும் நன்றாக பேசுவார் ஆனால் தெலுங்கில் அப்படி கிடையாது அவர்களுக்கு யாரிடம் பேச வேண்டும் என இருக்கிறதோ இது போன்ற சில நபர்களிடம் மட்டும் தான் பேசி முடிவெடுக்கிறார்கள். மிகுந்த மன வருத்தமாக இருக்கிறது என்னுடைய அம்மாவும் இதனால் மிகவும் கவலை அடைகிறார். இதனால் பிக்பாஸ்யிடம் போன் செய்து என் மகளை ஏன் காண்பிக்கவில்லை அப்படி காண்பித்தால் ஒரு நிமிடம் மட்டுமே தான் காண்பிக்கிறீர்கள் என சண்டை போட்டு இருக்கிறார்கள். 24 மணி நேரம் என சொன்னீர்கள் அதிலும் பாதியை கட் பண்ணி விடுகிறீர்கள் என இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் அட்டூழியங்களை போட்டு உடைத்துள்ளார் அபிநயஸ்ரீ.