சினிமா நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் ஈசியாக தேடி தர ஒரே ரூட் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் தான் அப்படி அதில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை காஜல் பசுபதி நடத்திய போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் வெளியாக வைரளாகி வருகிறது.
சின்னத்திரையிலும் மற்றும் வெள்ளித்திரைகளும் பல்வேறு படங்களில் நடித்து பின்னர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்பு இவருக்கு தேடி வர இவர் நடித்த திரைப்படம் தான் டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்புக்குதிரை, கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல நடன கலைஞரான சாண்டியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதை அடுத்து காஜல் பசுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து வரும் அம்மணி சினிமா முதல் அரசியல் வரை அனைத்திலும் கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து சமீப காலங்களாக ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு உள்ளார்.
நடிகை காஜல் பசுபதி அச்சு அசலாக மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல உடை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்த கேப்ஷனில் தலைவி போல் வர முடியாது இருந்தாலும் தலைவிக்காக தலைவி போல் முயற்சி செய்வது தவறில்லை என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்தப் புகைப்படம்.