ஹனிமூன் என்ஜாய் பண்ணும் நயன்தாராவுக்கு காத்திருக்கும் பெரிய ஆப்பு.?

wikki and nayanthara
wikki and nayanthara

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா தொடர்ந்து பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் தனது நீண்ட வருட காதலன் விக்னேஷ் சிவனை ஒருவழியாக கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். விக்கி மற்றும் நயன்தாராவின் திருமணம் மிக சிறப்பாக அரங்கேறியது.

அதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் மற்றும் பரிசு பொருட்களையும் வழங்கினர். திருமணம் முடிந்த கையோடு விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் சாமி தரிசனம் மற்றும் உறவினர் வீட்டிற்கு எல்லாம் சென்று வந்து பின்பு ஒரு குட்டி ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு இவர்கள் வெளியிட்ட புகைப்படம் அப்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியது.

பின்பு சில நாட்களிலேயே தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியா போட்டியை சிறப்பாக நடத்திக் கொடுத்தார் மீண்டும் சிறு இடைவேளை காரணமாக விக்கி மற்றும் நயன்தாரா இரண்டாவது ஹனிமூனிற்காக ஸ்பெயின் சென்றுள்ளனர். அங்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவிற்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஆனால் இன்றும் அவர் விக்கி கட்டிய தாலியை மாற்றாமல் இருந்து வருகிறார். இதன் மூலம் தாலியின் மேல் அவ்வளவு மரியாதை வைத்திருக்கும் நயன்தாரா இனி படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. ஏனென்றால் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தாலியை கழட்ட வேண்டியது வரும்.

அதனால் தாலியை கழட்ட மனமில்லாத நயன்தாரா இனி படங்களில் நடிக்காமல் தனது தயாரிப்பு நிறுவனம் மற்றும் மற்ற தொழில்களில் கவனம் செலுத்தி வருவார் என கூறப்படுகிறது. ஆனால் இது நயன்தாரா எடுத்த முடிவா அல்லது விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷனா என்று தெரியவில்லை. அதே சமயம் இது உறுதியான தகவலும் இல்லை..