தளபதி விஜயின் 65வது படமான பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் ரசிகர்களும் மக்களும் படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர் முன்பதிவும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது முன் பதிவில் கூட இரண்டு கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வசூலை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழகத்தைத் தாண்டி மற்ற மொழிகளிலும் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பீஸ்ட் படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகள் அனைத்தும் வேற லெவலில் இருந்தன கடைசியாக வெளிவந்த படத்தின் டிரைலர் கூட ஆக்ஷனில் வேற லெவல் இருந்தால் நிச்சயம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நல்ல தீனி போடும் என கருதப்படுகிறது.
காரணம் இயக்குனர் நெல்சன் இதுவரை எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே காமெடி, ஆக்ஷன் கலந்த படமாக இருந்து வந்துள்ளன அந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும்படி அமைந்துள்ளன அந்த வகையில் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஜய்யின் பீஸ்ட் படத்தை அவர் எடுத்து உள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே தென்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நெல்சன் திலீப்குமார் அண்மை காலமாக தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் அது போல தற்போதும் பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும், படம் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.
பீஸ்ட் படத்தில் raw ஏஜென்ட் அதிகாரியாக விஜய் நடித்துள்ளார் இந்த படம் ஒரு வித்தியாசமான ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும். படத்தின் கதையை விஜய் சாரை மனதில் வைத்து எழுதினேன் இந்த படத்தின் கதையை சொல்லும்போது பாதியிலேயே விஜய் அவர்கள் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறினார்.