இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் வசூல் ரீதியாக லாபம் பார்த்தது. இதில் விஜயுடன் பல சினிமா நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல கேரளா நடிகரான டாம் சாக்கோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் மூலம் அவர் தமிழிலும் அறிமுகமானார்.
ஏற்கனவே டாம் சாக்கோ விஜய்யின் பீஸ்ட் படத்தை ஏடாகூடமாக கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார் அதாவது ஊடகப் பேட்டியின் போது மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுகிறேன் என்று கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார். பீஸ்ட் படம் வெளிவந்த பின்னர் இந்த படம் தன்னை ஈர்க்கவே இல்லை என்றும் இந்தப் படத்தில் அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் எதுவும் நல்லா இல்லை என்றும் தன்னை இயக்குனர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் டாம் சாக்கோ கூறி வந்தது ஒரு பரபரப்பை கிளப்பு இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் டாம் சாக்கோ ஒரு புதிய பிரச்சனையில் சிக்கி கொண்டார் அதாவது சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் பங்கேற்ற டாம் சாக்கோ சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு மட்டும் இல்ல ஆண்களுக்கும் சில பிரச்சனைகள் உள்ளன என்று கூறினார் அதற்கு செய்தியாளர் ஒரு வேளை சினிமாவில் பெண் இயக்குனர்கள் அதிகம் இருந்தால் பிரச்சனைகள் தவிர்க்கலாம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பெண் இயக்குனர்கள் அதிகம் வந்தால் பிரச்சனைகளும் அதிகமாக வரும் என்று கூறியுள்ளார். அதாவது எங்காவது பெண்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடினால் அங்கு சண்டை வராமல் இருக்கிறதா என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். இப்படி பேசியதால் தற்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்று கூறப்படுகிறது.