சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் என்னதான் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும் வசூல் ரீதியாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது ஏன் நடிகர் ரஜினி படத்தின் வசூல் கூட ஏற்றம் இறக்கமாக இருக்கிறது ஆனால் தளபதி விஜய் படங்கள் மற்றும் தொடர்ந்து 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்துகின்றன.
இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது இவர் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தப் படக்குழுவும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்க இருக்கிறது அதில் முதலாவதாக இன்று இந்த படத்தின் முதல் பாடல் வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தரமான தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அண்மை காலமாக இணையதள பக்கங்களில் விஜய் படங்கள் 300 கோடி 400 கோடி வசூல் செய்து வருகிறது தகவல்கள் வெளி வருகின்ற ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் குறிப்பாக ட்விட்டரில் விஜய்க்கு ஆதரவாக சில ஐடிக்கள் இருக்கிறது.
அவர்களெல்லாம் ஒன்றாக தினமும் ஒரு பொய் தகவலை பரப்பி வருகின்றனர். கே ஜி எஃப் படத்தைவிட பீஸ்ட் படத்தின் வசூல் அதிகம் வாரிசு வியாபாரமே 300 கோடி நெருங்கி விட்டது போன்ற பொய் பில்டப்புகளை கொடுத்து இந்த ஐடி விஜய்க்கு ஹெல்ப் செய்கின்றன அதை தினமும் நன்றாக செய்து விஜயின் நம்பர் ஒன் பிம்பத்தை அப்படியே தக்கவைத்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.