அங்க தொட்டு இங்க தொட்டு அடிமடியில் கை வைத்த பயில்வான்.! ஆவேசத்தில் ஏ ஆர் ரகுமானின் சகோதரி…

bayilvan-ranganathan
bayilvan-ranganathan

சமீப காலங்களாக youtube மூலம் திரைக்குப் பின்னால் நடக்கக்கூடிய அசிங்கங்களை வெளிப்படையாக வீடியோ மூலம் கூரி பல சர்ச்சையில் சிக்கியவர் தான் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்களை வீடியோ கால் மூலம் ஏதாவது பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாக தனது youtube சேனலில் நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி பேசி சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இதற்காக பல சர்ச்சையை சந்தித்து வருகிறார் பயில்வான். இருப்பினும் அவர் வீடியோ வெளியிடுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் தற்போது வைரமுத்து மற்றும் ஏ ஆர் ரகுமானின் சகோதரி பற்றி பேசியது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று மணிரத்தினம் இடம் கேட்டபோது வைரமுத்து உடன் எந்த பிரச்சனையும் இல்லை இளம் கவிஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற காரணத்தால் தான் வைரமுத்துவை பொன்னின் செல்வன் படத்தில் பாடல்கள் எழுத அழைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இதைப் பற்றி சமீபத்தில் பேசிய பயில்வான் ரங்கநாதன் ஏ ஆர் ரகுமானின் சகோதரியிடம் வைரமுத்து தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று கூறியிருந்தார் பயில்வான் ஆனால் பயில்வான் கூறியது தவறு என்று தற்போது கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமானின் சகோதரி.

வைரமுத்து உடன் பணியாற்றியது உண்மைதான் ஆனால் வைரமுத்து என்னிடம் 10 அடி தள்ளி நின்று தான் பேசுவார் அப்படி இருக்கையில் பயில்வான் ரங்கநாதன் வாய் கூசாமல் இப்படி பொய்யான தகவலை வெளியிடுவது மிகவும் குற்றம். அவர் மீது மானநஷ்ட வழக்கை தொடர்வேன் என்று கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமானின் சகோதரி.