பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய காதலரை அறிமுகம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

ethir-nichal

சன் டிவி சீரியல் நடிகை தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு காதலரை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். எனவே இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் தொலைக்காட்சிகள் நம்பர் ஒன் சேனலாக வளம் வந்து கொண்டிருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல். பெண்களின் அடிமைத்தனத்தை அனைவரும் எதிர்த்து போராட வேண்டும் என்பதை நான் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தாலும் கூட எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

vaishnavi
vaishnavi

பலரும் இந்த சீரியலை பார்த்துவிட்டு என்னுடைய மனைவியின் நடவடிக்கைகள் மாறி இருப்பதாக கூறி வருவதால் இந்த சீரியலை முடிக்க இயக்குனர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது வரையிலும் எதிர்நீச்சல் சீரியல் 300 எபிசோடுகளை கடந்த மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

vaishnavi 1
vaishnavi 1

அந்த வகையில் இந்த சீரியலில் வாசு என்ற கேரக்டரில் நடிகை வைஷ்ணவி நடித்துவரும் நிலையில் இந்த சீரியலில் தைரியமான ஒரு பெண்ணாகவும், சுதந்திரமாக தன்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இவர் நடித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தன்னுடைய பிறந்தநாள் நாளின் பொழுது காதலரை அறிமுகம் செய்துள்ளார்.

vaishnavi 2
vaishnavi 2

அதோடு மட்டுமின்றி அவருடைய காதலருடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்தை பதிவு செய்து அதில், நீங்கள் மிகவும் விரும்பும் நபருடன் உங்கள் பிறந்த நாளை கொண்டாடுவதை விட வேறு என்ன சிறப்பு இருக்க முடியும்? என்று கூறியிருந்த வைஷ்ணவி இந்த பிறந்த நாளின் பொழுது எனது மனதை கவர்ந்தவர்.. என்னுடைய அன்பை பகிர்ந்து விட்டார்.. அவருடைய அன்பையும் அர்ப்பணிப்பையும் ஒரு அழகான நினைவூட்டல்லாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.