இந்திய அணி வங்கதேச உடனான மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது இதில் இரண்டு ஒருநாள் போட்டி ஏற்கனவே முடிந்துள்ளது அதில் இரண்டிலுமே பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று கோவையை தன்வசப்படுத்திக் கொண்டது.
இருப்பினும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி காணும் முனைப்பில் இந்திய அணி தீவிரம் கண்டு வருகிறது. இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் பல வீரர்கள் மாற்றப்படுவார்கள் என தெரிய வருகிறது குறிப்பாக சீனியர் வீரர்களை உட்கார வைத்துவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் அதிரடி ஆட்டக்காரருமான ரோகித் சர்மா மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது அதனால் மூன்றாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அதிரடியாக கூறப்பட்டது.
அவருக்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறது இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாண்டு வரும் அபிமன்யு ஈஸ்வரன் தான் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது ரோகித் சர்மா மூன்றாவது ஒருநாள் போட்டி மட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரிலும் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தொடரில் ஒரு சில சீனியர் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..