நான் வச்சது தான் இங்க சட்டம்.. சூனிய பொம்மைக்கே சூனியம் வைத்த வில்லி

gossips 2
gossips 2

சின்னத்திரையை பொருத்தவரையில் எப்போதுமே இரண்டு சேனல்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட போட்டி இருக்கும். இது வெளிப்படையாகவே தெரிந்தாலும் சேனல் தரப்பு அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் டிஆர்பியை ஏற்றுவதில் தான் குறியாக இருக்கும்.

அதில் பாப்புலர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சி தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதில் போட்டியாளராக பங்கு பெற்ற தொகுப்பாளினி தான்.

எப்போதுமே எனக்குத்தான் எல்லாம் தெரியும் என தலையில் ஒரு கொம்புடன் தான் இவர் வலம் வருவார். அதே போல் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் ஆதிக்கம் செலுத்தி மட்டம் தட்டுவதிலும் இவர் கில்லாடி.

அதே வேலையை தான் இந்த நிகழ்ச்சியிலும் அவர் பார்த்திருக்கிறார். ஆனால் என்ன மத்தவங்க மாதிரி நினைச்சியா என அவருக்கு நோஸ்கட் கொடுத்து இருக்கிறார் மற்றொரு தொகுப்பாளினி. இவரை ரசிகர்கள் செல்லமாக சூனிய பொம்மை என அழைப்பதுண்டு.

சுவாரஸ்யம் குறையாமல் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் இவருக்கும் சீனியர் தொகுப்பாளினிக்கும் தான் இப்போது பிரச்சினை. அந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் சீனியர் அம்மா வாயை திறக்காமல் இருக்கிறார்.

ஆனால் இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என சூனிய பொம்மை ஒட்டுமொத்த வண்டவாளத்தையும் எடுத்து விட்டார். இதனால் சீனியர் மேடம் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் ரசிகர்களுக்கு குறைந்து நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.