அஜித்தின் “வலிமை” திரைப்படம் 25 நாளில் அள்ளியது தொகை எவ்வளவு தெரியுமா.?

valimai
valimai

அஜித்தின் வலிமை திரைப்படம் ஒரு வழியாக இரண்டு வருடங்களுக்கு மேல் கழித்து பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம் ஆக்ஷன், சென்டிமென்ட், திரில்லர் கலந்த திரைப்படமாக இருந்ததால் அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் முதல் ஒரு வாரத்திற்கு ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் இப்பொழுது பொதுமக்களும், குழந்தைகளும் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.

அந்த அளவிற்கு படு விறுவிறுப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. வலிமை திரைப்படம் தமிழில் தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசானது. அஜித்தின் கேரியரில் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் சூப்பர் கலெக்சனை அள்ளியது அதேபோல வெளிநாடுகளிலும் அஜித்தின் வலிமை திரைப்படம் வசூல் வேட்டை நடத்தியது.

வலிமை திரைப்படம் 25 நாட்களை தொட்டு உள்ளது இதனை எடுத்து வலிமை படத்தை ஒரு சில திரையரங்குகள் வேற லெவல் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதுவரை 25 நாளில் வலிமை திரைப்படம் சுமார் 224.80 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பொழுது கூட பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து மக்களை மகிழ்கின்றன அதே சமயம் வலிமை திரைப்படத்திற்கான முன்பதிவும் ஜோராக நடந்து வருவதால் வலிமை திரைப்படம் இன்றும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் வலிமை படம் இன்னும் வசூல் வேட்டை பெரிய அளவில் நடத்தும் என திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறிவருகின்றனர்.

வலிமை திரைப்படம் இதுவரை இவ்வளவு கோடியை அள்ளியது மிகப்பெரிய ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது நிச்சயம் இன்னும் சில கோடிகளை அள்ளி நல்லதொரு கலெக்ஷனை எட்டும் என்பதே வலிமை படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது.