அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான டான் திரைப்படம் உலக அளவில் அதிக திரையரங்கில் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றனர். இந்த படம் பிரபல இயக்குனர் அட்லி உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபிசக்கரவர்த்தி முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகொடுத்து டான்.
திரைப் படத்தை எடுத்துள்ளார் படம் எதிர்பார்க்காத அளவு விமர்சனத்தை பெற்று வருகின்ற நிலையில் வசூலும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சமுதிரகனி, எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பிரியங்கா அருள்மோகன் போன்ற பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய ஒரு கலவையான திரைப்படமாக அமைந்ததால் நாளுக்கு நாள் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றன அந்த வகையில் இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபீஸ் இல் இடம் பெற்ற நிலையில் டான் திரைப்படம்.
கூடிய விரைவிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். அதன் படி டான் படம் ஒவ்வொரு நாளும் வசூலில் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றுடன் 11நாள் முடிவடைந்தன. இந்த நிலையில் 11 நாள் முடிவில் டான் திரைப்படம் உலக அளவில் 98 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் நாளையே 100 கோடியைத் தொட்டு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் படம் வெளிவந்த குறைவான நாட்களிலே 100 கோடியை தொடுவதால் மீதமுள்ள நாட்களில் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றன.