விஜயின் பிகில் படத்தை மிகப்பெரிய அளவில் தயாரித்து தனக்குத்தானே ஆப்பு வைத்த ஏஜிஎஸ் நிறுவனம்.! இவர் தான் முக்கிய காரணமாம்.

சினிமாவைப் பொருத்தவரை கதையம்சம் உள்ள குறைந்த பட்ஜெட் படங்கள் கூட மிகப் பெரிய அளவில் லாபத்தை ருசிப்பது வழக்கம். அப்படி சிறப்பான படங்களை எடுத்து வந்த ஏஜிஎஸ் நிறுவனம் மொத்தப் படத்தின் காசையும் மிகப்பெரிய பட்ஜெட் படத்திற்கு போட்டு  தற்பொழுது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது. மீண்டும் குறைந்த பட்ஜெட் படங்களை இயக்க ரெடியாகிவிட்டது

அப்படி இந்த நிறுவனம் எந்த திரைப்படத்தை இயக்கி இப்படி அதல பாதாளத்திற்கு சென்றது என்று பார்த்தால் விஜய்யின் பிகில் திரைப்படம்தான்.

இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் மிக சூப்பராக இருப்பதாக நினைத்து அட்லீ ஒவ்வொன்றிற்கும் காசை பிடுங்கி உள்ளதால் படத்திற்கான பட்ஜெட் தாறுமாறாக எகிறியது.

படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தினாலும் அது விநியோகம் செய்தவருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது தவிர தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது.

படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி இந்த படத்தை எடுப்பதற்கு முன்பாகவே இவர் மீது அரசல்புரசலாக சில தகவல்கள் வெளியாகியது அட்லி குறித்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து முடிக்க மாட்டார் அதைவிட ஒரு சில கோடிகள் அதிகமாகும் என அப்போதே கோலிவுட் வட்டாரங்கள் பக்கத்தில் பேசப்பட்டது.

இருபின்னும் ஏஜிஎஸ் நிறுவனம் இழுத்து போட்டு தனக்குத்தானே மிக பெரிய குழியை தோண்டி கொண்டது.

அந்த நிறுவனமும் தற்போது இனி பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க போவதில்லை என்பதால் குறைந்த பட்ஜெட் படங்களை எடுத்து. நல்ல லாபம் பார்க்க திட்டம் தீட்டியுள்ளது.

எது எப்படியோ ஏஜிஎஸ் நிறுவனம் பொறுத்த வரை ஒரு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது அது என்னவென்றால் அதிக பட்ஜெட்டில் எடுத்தாலும் அதை நல்ல தரமான முறையில் கொடுப்பதால் மக்கள் இந்த நிறுவனத்தை நம்புகின்றனர்.