ஒரே வீட்டில் மூன்று தலைமுறையாக நடிகைகளா..! இந்த சினிமா குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்,.?

tamil actress
tamil actress

Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை தான் சினிமாவில் பீக்கில் இருக்கும் பொழுது பிரபலங்கள் தனது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவது வழக்கம் அதேபோல் அக்கா தங்கைகளாகவும் சினிமாவில் பிரபலமடைந்து இருக்கின்றனர். இவ்வாறு ஒரே குடும்பத்தில் இத்தனை நடிகைகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு தமிழ் சினிமாவை கலக்கிய குடும்பம் குறித்து பார்க்கலாம்.

லட்சுமி அவர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவும் நடிகை ஆவார் இவர் நான்காவது தலைமுறை. அம்மா லட்சுமி, பாட்டி ருக்மணியின் அர்பணிப்பு ஐஸ்வர்யாவிடம் இருந்தால் அவரும் சிறந்த நடிகையாக சினிமாவில் பிரபலமாகி இருப்பார்.

தமிழ் சினிமாவில் இரண்டு ருக்மணிகள் பிரபலமாக இருந்துள்ளனர் அதில் ஒருவர் ஆர்கே ருக்மணி மற்றொருவர் குமாரி ருக்மணி. முதலாக இருக்கும் ருக்மணி 30-40களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தார். இவரை பாரிஸ் பியூட்டி என புகழ்ந்து வந்தார்கள். இவரை அடுத்து குமாரி ருக்மணி 30களின் இறுதியில் முதல் 80களில் இறுதி வரை தமிழ் சினிமாவில் நடித்து வந்தார் குமாரி ருக்மணி தாய்தான் ஜானகி.

எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் தான் அந்த இயக்குனர்.? உண்மையை உடைத்த அஞ்சலி..

தஞ்சாவூரை பூர்விகமாகக் கொண்ட ருக்மணிக்கு சின்ன வயது இருக்கும் பொழுது சென்னையில் குடியேறியுள்ளனர் ஹரிச்சந்திரா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்துள்ளது. இதில் லோகிதாசனாக நடிக்க சரியான குழந்தை நட்சத்திரம் அமையவில்லை இந்த நேரத்தில் நாயகி டி.பி ராஜலக்ஷ்மி தனது பக்கத்து ரூமில் தங்கியிருந்த சுட்டி குழந்தையை பார்த்திருக்கிறார்.

அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்ததால் சின்ன வயது லோகிதாசராக நடிக்க வைக்கலாம் என்று இயக்குனரிடம் சொல்ல அவர் ருக்மணியின் தாயின் சம்மதம் பெற்று ஹரிச்சந்திரா படத்தில் ருக்மணியை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். பிறகு சிந்தாமணி, பாலயோகினி, தேச முன்னேற்றம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான இவர் ஸ்ரீவில்லி என்ற திரைப்படத்தின் மூலம் டி.ஆர் ராமலிங்கத்துக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினாக அறிமுகமானார். 1946ஆம் ஆண்டு ஒய்.வி.ராவ் தயாரித்து இயக்கிய நடித்த படத்தில் ருக்மணி அவருக்கு ஜோடியாக நடிக்க இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட பிரபுதேவா இயக்கிய திரைப்படம்.! தலைவன் அப்பவே மாஸ் காட்டியுள்ளாரே…

பிறகு நாயகியாக மட்டுமல்லாமல் தனக்கு கிடைக்கும் கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ருக்மணி. ருக்மணியின் மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. லட்சுமியும் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் இவரது பாட்டி ஜானகியும் ஒரு நடிகையாவார். இவ்வாறு தனது பாட்டி, தாய் அளவிற்கு லட்சுமி சிறப்பாக சினிமாவில் ஜொளிக்கவில்லை.