வில்லன் கதாபாத்திரத்துக்கு நிகராக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகைகள்.! அட இவருமா.?

actress
actress

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ரம்யா கிருஷ்ணன்:- இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், நாசர், செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம்  படையப்பா. இந்தத் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் ஒரு நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி உள்ளார். மேலும் ரஜினி அவர்களே ஒரு பேட்டியில் என்னுடைய வாழ்க்கையில் சிறந்த வில்லன்கள் யார் என்றால் ஒன்று நீலாம்பரி இன்னொன்னு ஆண்டனி. இவர்கள் தான் என் வாழ்க்கையில் சிறந்த வில்லன் நடிகர்கள் என்று கூறியுள்ளார்.

ரீமா சென் :- தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பிரபலமானவர் தான் நடிகை ரீமா சென் இவர் வல்லவன் திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார் அதேபோல் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் அனிதா பாண்டியன் என்ற வில்லி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சுசானே ஜார்ஜ் :- மைனா திரைப்படத்தில் சுதா பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் நடிகை சுசானே ஜார்ஜ். இந்த திரைப்படம் நடிகை அமலா பால் அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படமாகும்.

வரலட்சுமி சரத்குமார்:- விஷால் நடிப்பில் வெளியாகி ஓரளவு வெற்றி கண்ட திரைப்படம் சண்டக்கோழி 2. இந்த திரைப்படத்தில் பேச்சு கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தெலுங்கானா சகுந்தலா:- விக்ரம் நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம் தூள் இந்த திரைப்படத்தில் சொர்ணாக்கா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் நடிகை சகுந்தலா. மேலும் இந்த சொர்ணாக கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

ஸ்ரேயா ரெட்டி :- நடிகர் விஷால் நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம் திமிரு இந்த திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இந்த திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜோதிகா:- 90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகை ஜோதிகா இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஸ்மிதா என்ற வில்லி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜி சந்திரசேகர்:- தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் அம்மா கதாபாத்திரங்களையும் நடித்த பிரபலமானவர் நடிகை விஜி. இவர் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் கயவர்ணம் என்ற வில்லி கதாபாத்திரத்திலும் மதயானை கூட்டம் திரைப்படத்தில் செவணம்மா என்ற வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டியுள்ளார்.

திரிஷா :- நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த அதிரடி திரைப்படம் கொடி இந்த திரைப்படத்தில் ருத்ரா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்துள்ளார் நடிகை திரிஷா.