விஜய் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய நடிகை.. அவருக்கு பதில் இனிமேல் இவர்தான்.!

vijay-tv-2

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொலைக்காட்சியாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. மேலும் அந்த சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகும் ஏராளமான பிரபலங்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் நிலையில் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களின் நடிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து வருகிறார்கள்.

அதாவது விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் முத்தழகு இந்த சீரியல் மதியம் 3:30 மணி அளவில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆனந்த் பாபு, லக்ஷ்மி, வாசுதேவன், சோபனா, ஆஷிக் சக்கரவர்த்தி, தீபா, கீதா, சாந்தி, கணேஷ், மகாலட்சுமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் முத்தழகின் தங்கையாக நடித்து வந்தவர் தான் நடிகை தஷனா. இவர் தற்பொழுது வானத்தைப்போல சீரியலின் அடுத்த வருகிறார் இவர் முத்தழகு சீரியலில் கதாநாயகியின் தங்கையாக தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது இந்த சீரியலை விட்டு விலகி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தங்கம் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரம்யா மேக்கப் ஆர்டிஸ்ட் எனவும் அவர் ஏற்கனவே சில சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது எனவே இனிவரும் எபிசோடுகளில் தங்கம் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா தான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அது குறித்த புகைப்படங்களும் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

actress 1
actress 1

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக விஜய் டிவியில் இருந்து ஏராளமான நடிகைகள் வெளியேறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து பல நடிகைகள் விஜய் டிவியை விட்டு வெளியேறி உள்ளார்கள்.